கனிவுமிகு யினியதொரு காதலியாய் வந்தாய் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(விளங்காய் 3 / மா)
கனிவுமிகு யினியதொரு காதலியாய் வந்தாய்;
அனுசரித்து நடப்பவளே யாதரித்தே யென்னைக்
கனவுலகந் தாண்டியுமே காத்துநிற்பாய் கண்ணே;
பனிப்பொழிவா யுன்றனையே பரிவுடனே காப்பேன்!
- வ.க.கன்னியப்பன்