சேல்கெண்டைக் கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

குடல்வாத சூலை கொடுக்குஞ்சேற் கெண்டை
அடல்வாத மேகமுமுண் டாக்குஞ் - சடமீது
புண்ணுஞ் சிரங்கும் பொருந்திநிற்கச் செய்துவிடும்
உண்ண மிகுசுவையாம் ஓது!

- பதார்த்த குண சிந்தாமணி

மிக்க சுவையுடைய இக்கறி குடல்வாதம், வாதப்பிரமேகம், புண் கிரந்தி இவற்றை யுண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-23, 4:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே