கெளிற்றுக் கறி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(’ய்’இடையின் ஆசு)
நெ’ய்’த்திருக்கும் நொய்த்திருக்கும் நீங்காத சுக்கிலமாம்
ஒத்திருக்கும் வன்கெளிற்றை யுண்டக்கால் - மெத்த
கரப்பானும் புண்ணுங் கபமும் பெருகுந்
தரைக்குள் எவருக்குஞ் சாற்று
- பதார்த்த குண சிந்தாமணி
கெளிற்று மீன் வீரியம், அரைக்கடுவன், புண், சிலேட்டுமம் இவற்றைப் பெருக்கும்