போனதெங்கே செல்லமே
நட்டு வச்ச ரோசாச் செடி
மொட்டு விட்டு நிக்கையிலே
தொட்டு பறிக்காம
விட்டு விட்டு போனாயே
என் செல்லமே !
எங்கெங்கும் உன் சிரிப்பு
எசை போல கேட்குதடி
என் செல்லமே
உன்னைக் காணாமல்
உள்ளம் தவிக்குதடி செல்லமே
ஆரத்தழுவாமே செல்லமே-இப்ப
ஆரைத்தழுவிடுவேன் செல்லமே
நீச்சு நிலம் ஏதுக்கடி செல்லமே
நீயிருந்தால் போதுமடி செல்லமே
நீரேதும் இறங்கலையே
நினைவெல்லாம் கிறங்கிடுதே
வேறேதும் தோனலியே செல்லமே
விழி மூடி போனதெங்கே செல்லமே !