இறைவன்

நிறம் ஏதும் இல்லா தேசுநீ
அன்று கோகுலத்து கானகத்தில்
இடைச் சிறுவனாய் குழல் ஏந்தி
கன்றுகள் மேய்த்திட சென்றதும் நீதான்
சென்றதால் தானோ உந்தன் மேனியும்
கரிய நிறம் ஆனதோ கண்ணா

நிறம் ஏதும் இல்லா தேசுநீ
நிறம் ஏற்று நரனாய் அவதரித்தாய்
அன்று ராமனாய் தசரதன் மகனாய்
நிறம் ஏதும் இலா தேசுநீ
பச்சை நிறம் ஏற்று மகிந்தாய்
குறித்த யுகத்திலோ நீசிவந்து
இருந்ததாய் மாமுனிவர் கூறுவார்

கண்ணா மணிவண்ணா நிறமில்லாதேசுநீ
ஆனால் என்னுளத்தில் நீலமேக
ஸ்யாமளனாய் என்றும் நிறைந்துள்ளாய்
உன்னை பாலகனாய் நீல வண்ணனாய்ப்
பார்த்து மகிழவே விரும்பும் என்னுள்ளம்

நிறம் ஏதுமில்லை தேசுநீ இப்படி
பக்தரை மகிழ்விக்க உருக்கொண்டு
நிறமோடு அழகாய் மகிழ் விக்கின்றாய்
என்னென்பேன் உந்தன் லீலா வினோதம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (19-Feb-23, 4:04 pm)
Tanglish : iraivan
பார்வை : 140

மேலே