யார் பத்தாம் பசலி

கோயிலில் குடி கொண்டிருக்கும் சாமிசிலை
வாயில் வந்தபடி அது வெறும்கற்சிலை
என்கின்றார் வணங்க மறுக்கின்றார் ஆயின்
இறந்தவருக்கு தெருத் தெருவாய் சிலை
வைத்து மாலை இட்டு கைகூப்பி
வணங்கு கின்றார் கோயில் சிலையில்
இறப்பில்லா சாமியின் சாந்நித்தியம் உண்டு
அதனால் அதைப் பணிந்து வணங்க
உனக்கு உய்வுண்டு மறுபிறப்பில் இப்படி
மனித சிலைகளை வணங்கிட நீ
சொல்ல வருவதுதான் என்ன
கடவுளுக்கு உருவில் என்கின்றார் உருவில்லா
கடவுள் எப்படி உருவு கொடுத்து
உனைப் படைத்தான் சொல்லு தங்கமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (21-Feb-23, 2:08 pm)
பார்வை : 46

மேலே