தமிழே, என் தாயே
இன்று உலகத் தாய் மொழி தினம்! (21/2/2023)
தமிழே, என் தாயே!
கருப்பையிலிருந்து உலகிற்கு,
அழுத குரலோடு,
வெளிவந்த நாள் முதல்,
தாயுடன் நான் பாசம் கொண்டேன்;
தாலாட்டி, பாலூட்டி
பொத்தி, போற்றி, அணைத்து
வளர்த்த அந்த தாயே தெய்வமெனக்
கண்டு கொண்டேன்;
பிழையற தமிழையெனக்கு
பொறுமையுடன் கற்றுத் தந்து
கல்வி புகட்டிய அத்தாயின் அருமையை
இன்று நான் கண்டு கொண்டேன்;
பூதவுடல் மறைந்தாலும்
என்னுடன் உறையாட, உறவாட,
தமிழ் மொழியாய் என் தாய்
என்றுமே என்னுள்ளே வீற்றிருப்பாள்.
கல்கத்தா சம்பத் குமார்