கீதை நாயகன்
ஆதி பிரான் ஆதி பகவன்
அவனியில் உலாவி வரும் அசுரரை
மாய்க்க தக்க தருணத்தில் அவதரிப்பவன்
மூவருக்கு முதல்வன் திருமால் அவனே
எங்கு எப்போது வாந்தி றங்குவான்
யாரும் அறிந்திலர் இப்படி அறிஞர்
கூறுவார் அறிவிலி எள்ளி நகைப்பார்
கலி முத்திய இக்காலத்தில் ஒன்று
மட்டும் உறுதி நம்புவார் கெடுவதில்லை
இது கீதை நாயகன் வாக்கு