சிறுஏலம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)

மலவாத மோடு வயிற்றுக் கொதிப்பு
சலம்ஊறல் வாய்இனிப்பு தாகஞ் - சலபேதி
வே’ர்’க்குந் தலைநோய் மிகுரூட்சை ஐயமிவை
போக்குஞ்சிற் றேலம் புகல்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் மலவாதம், நுரைத்த மலம், உமிழ்நீர் சுரத்தல், வாயினிப்பு, தாகம், நீர்ப்பேதி, வியர்வை, தலைவலி, மிகுசுரம், கபம் ஆகியவை தீரும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Feb-23, 7:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே