அகமும் புறமும் தந்த தமிழ்

அகநானூறும் புறநானூறுமாய் ஆனந்தம் கொடுப்பவளே !
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

மாந்தரெலாம் விலங்குகளாய்
மந்தைகளாய் வாழ்கையிலே/
தீந்தமிழே நின்மக்கள்
திருந்தியநல் மொழிகண்டார் /

இலக்கியங்கள் காவியங்கள்
இலக்கணங்கள் வரையறுத்தார்/
உலகமெலாம் வியந்திடவே
இசையுடனே நாடகங்கள் /

முச்சங்கம் அமைத்தேதான்
முத்தமிழை வளர்த்தார்கள் /
அச்சமிலா அரசரைப்போல்
அவைப்புலவர் நிமிர்ந்தார்கள் /

அகப்பாடல் நானூறும்
புறப்பாடல் நானூறும் /
திகட்டாதக் காப்பியங்கள்
பெரிதைந்தும் சிறிதைந்தும் /

பதினெண்கீழ் மேல்க்கணக்கும்
தொகைஎட்டும் பத்துப்பாட்டும்/
மதிமகிழப் படைத்தாயே
பைந்தமிழே வாழிவாழி //

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (24-Feb-23, 10:58 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 2340

மேலே