பெரிய ஏலம் - எண்சீர் ஆசிரிய விருத்தம்

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் மா விளம் அரையடிக்கு)

தொண்டை வாய்கவுள் தாலு குதங்களில்
தோன்றும் நோயதி சாரம்பன் மேகத்தால்
உண்டை போல்எழுங் கட்டி கிரிச்சரம்
உழலை வாந்தி சிலந்தி விஷஞ் சுரம்
பண்டை வெக்கை விதாக நோய் காசமும்
பாழுஞ்சோமப் பிணிவிந்து நட்டம் உள்
அண்டை யீளைவன் பித்தம் இவைக்கெலாம்
ஆல மாங்கமழ் ஏல மருந்ததே!

பொருளுரை:

பெரிய ஏலம் சுரக்கினம், பித்தமுகபாகம், தரகுபாகம், வாய்ப்புண், தோல் வறட்சி, பேதி, அரையாப்புக் கட்டி, கிரீச்சரம், வாயுழலை, வாந்தி, சிலந்திவிடம், சுரம், அதிதாகம், இருமல், சோம நோய், உட்டிணபேதி, கபம், நெஞ்சிற் கோழை, இரத்த பித்தம், விந்து நட்டம் ஆகியவற்றை விலக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Feb-23, 7:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே