கலியுகம்
கலியுகம்
அன்புக்கு இடமில்லை எதுவும் தேவையைப் பொருத்த முடிவே
ஆதாயத்தை மனதில் என்றும் வைத்து கொண்டு பேசிடும் நட்பே
இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் வாழ்க்கை ஒரு கதையே
ஈன்றவளை புறம் தள்ளி தன்னை காப்பதில் தான் கவனம் என்றுமே
உயர்ந்த நிலை வந்த பின் ஏறிய ஏணியை தள்ளுவது தான் வழக்கமே
ஊருக்கெல்லாம் உபதேசம் உள்ளிருப்பது எப்பொழுதும் தன்னலமே
எண்ணமெல்லாம் எனது நான் என்ற நினைப்பு தான் எப்பொழுதுமே
ஏட்டு கல்வி கற்பதெல்லாம் தன்னைத்தான் வாழவைக்க வேண்டியே
ஐம்புலனுக்கும் அடிமையாகி அதன் வழி செயல்தான் யாவையிலுமே
ஒரு வட்டத்தில் வாழ்ந்து அதை விட்டு வெளியே வராமலே
ஓய்வு இல்லாமல் உழைப்பது தனி ஒருவனின் நலனுக்கே
ஒளஷதம் தனக்கு கலந்தளிக்க வேண்டியதற்குத் தான் துணையே
கலியுகத்தில் வாழும் இந்த வாழ்க்கை ஒரு இன்பமான கொடுமையே