பராசக்தி துதி
உன் வடிவழகு கண்டு மகிழ
எனக்கு கண்ணிரண்டு தந்தாய் மீனாட்சி
எனக்கிறு நாவு தந்தாய் கலைமகளே
ஆயிரமாயிரம் நாமம் பாடி மகிழ
இன்செவி இரண்டு தந்தாய் காமாட்சி
பாடும் உன்நாமம் கேட்டு மகிழ
கரங்கள் இரண்டு தந்தாய் பராசக்தி
கரம்கூப்பி உன்னை துதித்து மகிழ
பாத மிரண்டு தந்தாய் அலைமகளே
உன்னை மறவாது என்றும் வணங்கிட
மண்ணில் என்னுடல் முற்றும் பணிந்து
என்னை உனக்கே பக்தியால் அர்ப்பணிக்க