அரசின் திட்டமும் ஒதுக்கிய நிதியும்

கலிவிருத்தம்

கழிவுநீர் பாதையை பைஞ்சுதை கொண்டே
அழிவிலா பாதையாய் அமைக்க அரசும்
வழிவகை செய்து திட்டம் தீட்டினால்
வழியே அடைத்து விழுந்திடும் கட்டுமானம்

சாலையை அமைத்திட நனிமிகு முறையில்
வேலையை செய்யக் கவனமாய் திட்டமும்
கூலியும் ஒதுக்கி வைப்பினும் முடிவில்
சாலையோ மாதுளை சுளையைப் போன்றதாய்.

குழந்தைகள் உடல்கள் வலுப்பெற முட்டையை
வழங்கிட கெத்தாய் தீட்டிடும் திட்டமும்
அழுத்தம் தந்திடும் அரசியலால் அளவினை
இழந்து குருவியின் முட்டையின் அளவிலே

அரசின் திட்டங்களைச் செய்திட ஒப்பந்த
வரைமுறை வகுத்து வழங்கிட செய்தால்
கரைகண்ட நிறுவனம் பெற்று செய்யும்பணி
திரைகடல் கரைத்த உப்பைப் போன்றே

வரிகள் வரிகள் வரிகளே எங்கும்
சரிவில் சறுக்கினும் வரிகள் உண்டு
தரித்திடும் சாம்பலும் கரியும் வரியுள்
பெரிய மனிதர்கள் வரியிலா பறவையாய்
— நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (4-Mar-23, 10:56 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 26

மேலே