வென்றெடுப்பாய் உரிமைகளை

பண்பட்டு பண்பாட்டைப் பேணிக் காத்து
பாமரர்கள் உள்ளத்திலே விளக்கை ஏற்று
உன்இனத்தைத் தாழ்த்தாமல் உயர்த்தி வைத்து
உலகமதில் இமயமென உயர்ந்து நில்லு
உன்முதுகில் ஏறிநின்று நாட்டை ஆண்டு
உனையழிக்க நினைக்கின்ற போக்கை மாற்று
வன்முறையால் நாட்டினையே வளைத்துப் போட்டு
வஞ்சகரின் வாய்மொழியை உணர்ந்து செல்லு…

எழுத்துரிமை பேச்சுரிமை எல்லாம் உண்டு
எழுதினாலும் பேசினாலும் சிறையும் உண்டு
புழுத்துவிட்ட விதையாக உன்னை ஆக்கி
உச்சாணிக் கொம்பேறி இருப்பார் என்றும்
தொழுகின்ற கையுள்ளும் வாளை வைத்து
துண்டாக்கிப் போட்டிடவே முயலு கின்றார்
விழித்திடுவாய் மானுடனே ! வீறு கொள்ளு
வென்றெடுப்பாய் உரிமைகளை என்றும் நீயே !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (5-Mar-23, 6:15 pm)
பார்வை : 119

மேலே