பெண்ணுரிமை

இன்னும் இந்த நூற்றாண்டில் நவீன
உலகில் பெண்ணினம் தேடுவது என்ன
சொல் கிளியே சொல்லுவேன் கேள்
சம உரிமை தன் மானம் -எத்தனையோ
இன்னல்கள் இவள் வாழ்வில் சொல்ல
முடியா தொல்லைகள் சில சொல்லியும்
பயனிலா தொல்லைகள் பலப்பல
ஊமையாய் அத்தனையும் தாங்கி இவள்
குடும்ப பாரமும் தாங்கி நடாத்துவது
வெளி உலகில் ஒரு வாழ்க்கை
உள்ளே இவள் குமறுவது நாளை
உலகில் ஆணுக்கு சமமாய் உரிமையில்
ஆனால் மென்மையில் பெண்ணாய்
அன்பு தாயாய் குலமகளாய் வாழ நினைப்பதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Mar-23, 5:05 pm)
Tanglish : PENnurimai
பார்வை : 156

மேலே