வாழ்க்கை ஒரு முடிவில்லா பயணம்
வாழ்க்கை ஒரு முடிவில்லா பயணம்
அன்பு என்பது வார்த்தைகளில் மட்டும் தான் வாழ்க்கையில் இல்லை
ஆதாயம் இல்லாமல் அடுத்து வந்து உதவ ஆட்களும் இல்லை
இதயம் நோக பேசிவிட்டு சென்ற பின்னும் வருத்தம் இல்லை
ஈன்றவர்சொத்துக்கு வழக்கு செய்யும் மக்களுக்கு பஞ்சம் இல்லை
உறவுகளின் உண்மை நிலை கண்டு வருந்திட கண்ணீரும் இல்லை
ஊரெல்லாம் பாராட்டினாலும் உன் சொந்தங்கள் உனக்கு இல்லை
எவ்வளவு அள்ளி கொடுத்தாலும் திருப்தி அடையும் உள்ளம் இல்லை
ஏங்கிய இந்த இதயத்திற்கு ஒரு நாளும் மகிழ்ச்சி வருவது இல்லை
ஐயங்கள் பல உள்ளன இப்பிறவில் ஊழ்வினை தீருமோ இல்லையோ
ஒன்றும் அறியாமல் உழன்று திரியும் இந்த வாழ்க்கைக்கு ஏது எல்லை
ஓயாத இப்பயணம் என்று முடியும் என்பது யாருக்கும் தெரியவில்லை
ஓளஷதம் போராடி பெற்ற உடல் காணும் கற்பனைக்கு முடிவில்லை
விழித்து கொள் மாயை நிறைந்த உலகை விட்டு வெளியே வா மானிடனே

