விமான வைபவங்கள் 1

விமான பணிப்பெண் : பயணிகளின் உடனடியான கவனத்திற்கு , நம் விமானத்தின் எதிரே நான்கு விமானங்கள் பறந்து வந்துகொண்டிருக்கிறது. நம் விமானம் அவைகளை இடிக்காமல் செல்லலாம் ஆனாலும் அந்த நாலில் ஒரு விமானம் நம்மை இடிக்கும் வாய்ப்பு இருப்பதால், மறு அறிவிப்புவரை அனைவரும் தமது இரு கைகளை தலையில் வைத்துக்கொண்டு, நான் செய்து காட்டுவது போல, நன்கு குனிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நம் விமானம் ஓட்டும் பைலட்டும் அப்படிதான் இப்போது குனிந்து கொண்டிருக்கிறார்.

பயணிகள்: ???
&&&&
விமான ஒட்டி: இனிய மாலை வணக்கம். நம் விமானம் இப்போது போபால் நகரத்திற்கு மேலே பறந்துகொண்டிருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் நாம் டெல்லி சென்று சேரலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
பயணி ஒருவர்: தயவுசெய்து போபாலில் வண்டியை நிப்பாட்டுங்க. என் மாமியார் சாகும் நிலையில் இருக்கிறார். அவர் சாவதற்கு முன்னால் அவரது சொத்துக்களை என் பெயரில் எழுதி வாங்கவேண்டும்.
விமான பணிப்பெண்: உங்க மாமியார் என்பதால் அவர் சொத்துக்களை அவரது மகளின் (உங்கள் மனைவியின்) பெயரில் தானே எழுதுவார்கள்.
பயணி: உங்களுக்கு விஷயம் தெரியாதும்மா. என் மனைவி இப்போது வேறு ஒருவனுடன் வாழ்ந்து வருகிறாள்.
விமான பணிப்பெண் அந்த பயணியின் பெயரை கேட்டுக்கொடு விமனஓட்டியிடம் சென்று இரண்டு நிமிடங்களில் திரும்பிவந்து பயணியிடம் சொல்கிறாள் " உங்களுக்கு அதிருஷ்டம்தான். இன்னும் ஐந்து நிமிடங்களில் விமானம் போபால் விமான நிலையத்தில் இறங்கும். எங்கள் பைலட்டும் உங்கள் மாமியாரை பார்க்க உங்களுடன் வருவார்".
பயணி( அதிர்ச்சியுடன்): அவர் எதற்கு என்னுடன் வரவேண்டும்?
விமான பணிப்பெண்: உங்க மனைவி வேறு ஒருவருடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்று சொன்னீர்களே அந்த மனிதர் இவர்தான்.

பயணி மயக்கம் அடைகிறார்.
&&&
ஒரு பயணி விமான பணிப்பெண்ணிடம்: என் பக்கத்தில் இருப்பவரிடம் நான் ஜோக்ஸ் சொல்லச்சொன்னால் ஒன்றும் சொல்லாமல் உம்மென்று மூஞ்சை வைத்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் கொஞ்சம் அவரிடம் சொல்லி ஜோக்ஸ் சொல்லச்சொல்லுங்களேன்.
விமான பணிப்பெண் அவர் பக்கத்தில் இருந்தவரிடம் காதோடு காது வைத்து இருநிமிடங்கள் உரையாடிவிட்டு இன்னொரு பயணியிடம் சொன்னார் " இந்த மனிதர் ஒரு நகைச்சுவை நடிகர்தானாம். அவருடைய மனைவியுடைய தங்கையின் மாமனாரின் சித்தப்பாவுடைய ஒன்று விட்ட தம்பியின் சம்சாரத்தோட பாட்டி இறந்துவிட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள இந்த மனிதர் செல்வதால் இப்போதைய நிலையில் ஜோக்ஸ் சொன்னால் நன்றாக இருக்காது என்பதால் முகத்தை துக்கத்துடன் வைத்திருப்பதாகவும், ஒருவேளை திரும்பி வரும்போது நீங்கள் அவருடன் விமானத்தில் அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பயணித்தால் உங்களுக்கு நல்ல ஜோக்ஸ் எல்லாம் சொல்வதாகக் கூறுகிறார்.

பயணி: ???
&&&
விமான பணிப்பெண் : பயணிகள் கவனிக்கவும், இப்போது நம் விமானம் அதனுடைய பொதுவாக செல்லும் விமனப்பாதையிலிருந்து கொஞ்சம் விலகி இந்தோர் விமானநிலையத்தின் வெளியில் இறங்கி ஒரு பத்து நிமிடங்கள் இருக்கும். பைலட்டுக்கு இந்தோர் ஜிலேபி மற்றும் போஹா( அவலில் செய்த பணியாரம்) சாப்பிடும் ஆசை திடீரென்று வந்துவிட்டதால் இந்த திடீர் இறங்கும் ஏற்பாடு. உங்களில் யாருக்கேனும் இந்த பணியாரங்கள் சாப்பிடும் ஆசை இருந்தால் எங்களுக்கு உடனடியாக தெரிவித்தால் நாங்கள் பைலட் மூலமாக வரவழைத்து கொடுப்போம். பணத்தை முன்கூட்டியே செலுத்திவிடவேண்டும். ஒரு செட் பணியாரம் (நாலு ஜிலேபி, நூறு கிராம் போஹா) முன்னூறு ரூபாய் மட்டுமே.

பயணிகள்: ???
&&&
விமான பணிப்பெண்: பயணிகளின் கனிவான கவனத்திற்கு, இப்போது விமானத்தை ஒட்டிக்கொண்டிருக்கும் பைலட் பிரேம்நாத்தின் காதலி அவளது பிறந்த நாளை இன்று கொண்டாடுவதால் நம் பைலட்டை காணத் துடிக்கிறாள். எனவே இன்னும் ஐந்து நிமிடங்களில் நம் விமானம் அதன் நேரடி பாதையை விட்டு சற்றே விலகி நாக்பூர் விமான நிலையத்தில் இறங்கும். அங்கே பிரேம்நாத்தும் அவர் காதலியும் தனிமையில் பதினைந்து நிமிடங்கள் இருப்பார்கள். அந்த நேரத்தில் பயணிகள் அவர்களுக்கு தோன்றும் எதையாவது செய்யலாம். ஏற்கெனவே இந்த விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகத்தான் புறப்பட்டது என்பதால் , இந்த ஒரு அரைமணியில் யாருக்கும் ஒன்றும் குடி எதுவும் முழுகிவிடாது என்று எங்கள் அன்பு பைலட் சொன்னதை நீங்கள் நிச்சயம் ஆமோதிப்பீர்கள் என நினைக்கிறோம். ஒரு வேளை உங்களின் காதலன் அல்லது காதலி எவரேனும் இப்போது நாக்பூர் விமனநிலத்தில் இருந்தால் நீங்களும் அந்த பதினைந்து நிமிடம் அவர்களுடன் சல்லாபமாக இருந்துவிட்டு வரலாம்.

பயணிகள்: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (12-Mar-23, 11:33 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 42

மேலே