விமான வைபவங்கள் 2

விமான பணிப்பெண் : வெளியே மோசமான தட்பவெப்ப நிலை காரணமாக விமானம் மேகங்களுடன் உரசுகையில் அதிர்வுகள் இருக்கும். எனவே பயணிகள் அனைவரும் பெல்ட்டை இறுக கட்டிக்கொண்டு சீட்டைவிட்டு எங்கும் செல்லாமல் அவரவர் இருக்கையிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது பாத்ரூம் செல்வதற்கு அனுமதி இல்லை.

பயணி ஒருவர்: தாயே விமானம் கிளம்பி முப்பது நிமிடங்களுக்குள் ஐந்து தடவை இப்படிப்பட்ட எச்சரிக்கையை கொடுத்துவிட்டீர்கள். மனிதன் எப்போதுதான் பாத்ரூம் செல்வது? ஒருவேளை நான் எல்லாவற்றையும் என் இருக்கையிலே செய்ய நேர்ந்தால் அதற்கு நீங்களும் இயற்கையும்தான் தார்மீக பொறுப்பு ஏற்கவேண்டும்.

விமான பணிப்பெண்: ???
&&&
விமான பணிப்பெண்: விமானத்தின் இரண்டாவது என்ஜினில் ஏதோ சிறு கோளாறு இருப்பதால் இப்போது பைலட் கொஞ்சம் சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார். இதனால் விமானம் சிறிது நேரம் தாழ்ந்து பறக்கும் என்பதை நாங்கள் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தமாதிரி நேரத்தில் நீங்களும் ஏதாவது நல்ல சிந்தனையில் ஆழ்ந்திருக்குமாறு எங்கள் அன்பு பைலட் அன்புமணி உங்களுக்கு அன்புடன் எச்சரிக்கை செய்கிறார். விமானம் தாழ்ந்து பறக்கிறது என்பதால் எங்களைத்தாழ்வாக எண்ணிவிடவேண்டாம் என்பதையும் இரண்டாவது பைலட் வம்புமணி உங்களிடம் சொல்லச்சொல்லி எனக்கு சொல்லிவிட்டு உடனடியாகத் தூங்கிப்போய்விட்டார்.
ஒரு பயணி: உங்களின் உயர்ந்த பண்பாட்டிற்கு எங்களது தாழ்மையான நன்றிகள். ஆமாம் இரண்டாவது என்ஜினில் சிறிது பழுது என்றால் முதல் என்ஜின் மொத்தமாக பழுதாகிவிட்டதா?
விமான பெண்மணி: கொஞ்சம் பொறுத்திருங்கள் , நான் கேட்டு வருகிறேன்.
அடுத்த இரண்டு நிமிடங்களில் விமான பணிப்பெண் வந்து அறிவிப்பு செய்கிறாள்: முதல் என்ஜின் நன்றாக இருக்கிறது, அதில்தான் இப்போது விமானம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இரண்டாவது என்ஜின் ஒரு தற்காப்புக்காகத்தான்.
இன்னொரு பயணி: அப்படி இருக்கையில் இரண்டாவது என்ஜின் பழுதாகியிருப்பதை இப்போது எங்களுக்கு எதற்குத் தெரியப்படுத்தி எங்களை கலவரப்படுத்துகிறீர்கள்?
விமான பெண்மணி: பயணிகள் எப்போதும் ஏதாவது புதிய செய்திகளை கேட்கவே ஆசைபடுகிறார்கள் என்பதை எங்கள் அன்பு பைலட் அன்புமணி நன்கு அறிந்தவர். அந்த நல்ல எண்ணத்துடன் அவர் எங்களிடம் சொல்லி நான் உங்களுக்கு அறிவித்ததுதான் புதிய செய்தி.
இன்னொரு பயணி: இப்படிப்பட்ட அச்சுறுத்தும் கண்ணராவி செய்தியை சொல்வதற்கு பதில் "பெல்ட்டை கட்டிக்கொண்டு அமருங்கள், சீட்டை விட்டு நகரதீரகள்" “பாத்ரூம் செல்லாதீர்கள்” போன்ற எச்சரிக்கைகள் எவ்வளவோ மேல்.
விமான பணிப்பெண்: ???
&&&
பைலட்: காலை வணக்கம், நான் பைலட் பைங்கனி பேசுகிறேன். நாம் புறப்பட்டு கிட்டத்தட்ட ஒண்ணரை மணிநேரம் ஆகிவிட்டது. இன்னும் அரை மணி ஆனால் இரண்டு மணி நேரம் ஆகிவிடும். அதன் பிறகு இன்னொரு மணிநேரம் கழிந்தால் மூன்று மணிநேரம் ஆகிவிடும்.

பயணி ஒருவர்: நீ இப்படி கலாய்ச்சுகிட்டே இருந்தீன்னா எங்களுக்கு புத்தி சுவாதீனம் ஆகிவிடும்.
பைலட் தொடர்கிறார்: மூன்று மணி நேரத்திற்கு பிறகு நாம் தரை இறங்க முயற்சி செய்வோம். டெல்லியில் பனிமூட்டம் மிகவும் அதிகமாக இருப்பதால் நாம் கீழே இறங்குவதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும். அந்த நேரத்தில்தான் என்ன செய்யப்போகிறோம் என்பதைப்பற்றி நான் என் சக பைலட் சகதேவனுடன் விமானத்தை ஒட்டியபடியே கலந்து பேசப்போகிறேன்.
இன்னொரு பயணி: ஏன், முடிந்தால் எவெரெஸ்ட் மலைச்சிகரத்தை கொஞ்சம் எங்களுக்கு வேடிக்கை காட்டிவிட்டு வாருங்களேன்.
விமான பணிப்பெண் பைலட் அறைக்குச்சென்று பேசிவிட்டு வருகிறார்.
விமான பணிப்பெண்: நான் நீங்கள் சொன்ன ஆலோசனையை பைலட் பைங்கிளிக்கு கூறினேன். அவர் சிரித்தபடியே ' டெல்லியிலே இவ்வளவு பனி என்றால், எவெரெஸ்ட்டில் பனியில் எல்லாமே உறைந்திருக்கும். நாம் இந்த நேரத்தில் அங்கே விமானத்தை ஓட்டிச்சென்றால் நம் விமானமும் உறைந்துபோய்விடும். நீங்களும் உறைந்து போயிடுவீங்க. நானும் உறைந்து போய்விடுவேன். மற்ற மூன்று விமான பணிப்பெண்களுக்கும் என்ன தேவதைகளா என்ன? அவர்களும் நம்முடன் உறைந்து போய்விடுவார்கள் “ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.
இன்னொரு பிரயாணி: பைங்கனி இப்போ உனக்கு ஒண்ணும் குறைந்து போய்விடவில்லை. உடனே விரைந்து டெல்லிக்கு வண்டியை ஒட்டிட்டுபோ. பெண் பைலட் விமானம் விடுகிறாய் என்பதற்காக இவ்வளவு போஸ் எதுக்கு அடிக்கிறாய்? இப்படியே நீ பேசிப்போட்டு எங்களை தாக்கினால் நாங்கள் எவெரெஸ்ட் டெல்லி போகவேண்டிய அவசியமே இல்லை. இங்கே இப்போவே இந்த விமானத்திலேயே உறைந்து போய்விடுவோம்.
மற்ற பிரயாணிகள்: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (13-Mar-23, 9:47 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 90

மேலே