கிழக்கு வெளுக்கிறது
கிழக்கு வெளுக்கிறது
கிழக்கின் விடியலில்
கீற்றாய் தெரிகிறது
சிறு சிவப்பு வெளிச்சம்
காரிருளில் அந்த
கரையோர வெளிச்சம்
காட்டு குருவிகளை
எழுப்பி விட்டதோ?
கீச் கீச் என
உற்சாகமாய்
கூச்சலிட்டு
சுற்றி சுற்றி
பறக்கின்றன
இதனின் கூச்சல்
கேட்ட பின்னேதான்
மனித இருப்புகளின்
அசைவுகளும்
நகர்தலும்
கிழக்கு கரையோரம்
கீற்றாய் இருந்த
வெளிச்சம் மெல்ல
மெல்ல பரவி
இரவின் அழுக்கு
நீக்க பட்டபோது
முகம் மலர
புன்னகையுடன்
வெளியே வருகிறான்
சிவப்பு கதிருடன்
சூரியன்