விடியலும் வந்தது வேட்கையுந் தந்தது - கட்டளைக் கலித்துறை
கட்டளைக் கலித்துறை
விடியல் வரயிங்கு வெள்ளி நிலவும்
..விழைந்திருக்க
விடியலுக் குக்காத்து விண்முகில் வந்து
..விரிந்திருக்க
விடியலுக் கே,நானும் வேட்கையாய் வந்திங்கு
..வீற்றிருந்தேன்
விடியலும் வந்தது வேட்கையுந் தந்தது
..வெற்றியுமே!
– வ.க.கன்னியப்பன்