என் உடன்பிறந்த

உதடுகள் ஒட்டாமல் உன்னை அழைத்தாலும்
உதடுகள் தொட்டே என்னை அழைக்கிறாய்
எனக்காய் நீ விட்டுக்கொடுத்தவைகள்
வரிசையிட முடியாதது
வெள்ளைக் குச்சிக்கு
விரல்முறுக்கியது முதல்
வேனற்கால சண்டைகள் வரை
எனக்காய் விட்டுக்கொடுத்தவைகள் -ஏராளம்
பள்ளிப் பயணங்களில்
என் சுமைகளையும் நீயே சுமந்து
விரல் பிடித்து நடந்திருக்கிறாய்
முகவரிகள் மாறிப்போனாலும்
சுகவரிகளையே சோதித்தறிகிறாய்
என்னை அறிந்த முதல் தோழி நீ!
என் உடன்பிறந்த இன்னொரு தாயும் நீ!!

எழுதியவர் : அ சார்லி கிருபாகரன் (15-Mar-23, 5:28 pm)
Tanglish : en udanpirantha
பார்வை : 50

மேலே