ஏழ்மையின் பிம்பம்

ஏழ்மையின் பிம்பம் //
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

ஏழ்மையின் பிம்பம்
இழிவின் சின்னமே/
தாழ்வினைக் காட்டிடும்
தரித்திரம் இன்னுமா /

மாளிகை ஆயிரம்
மனிதரின் இல்லமாய்/
ஏழையர்க் குடிசையோ
ஏளனம் ஆகுமே/

கோபுரம் வாழ்ந்திடும்
கடவுளும் கண்டிடார்/
மாபெரும் அரசுமே
மனதிலே கொண்டிடார்/

மாக்களாய் மானுடர்
மண்ணிலே சாவதோ /
தாக்கினால் கதவுகள்
தன்னிலே திறக்குமே /

உண்ணவும் உடுக்கவும்
உறையவும் செய்திட /
மண்ணகம் காப்பவர்
மறுவழி செய்கவே /

மக்களின் ஆட்சியில்
மனிதரின் உரிமைகள் /
சிக்கலும் இன்றியே
சிறந்திட உழைப்பொமே !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (15-Mar-23, 8:24 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 61

மேலே