விழிகளின் தீப்பொறி

விழிகளின் தீப்பொறி...

காய்ந்த மூங்கில்களின்
கடைசலில்
கனல் தெரித்துவிடுகின்றது !

சிக்கிமுக்கிக் கற்களின்
உரசல்களோ
தீயைக் கக்கிவிடுகின்றன !

மோதும் வாள்களும்
தீப்பொறி சிந்துகின்றன!

விரியும்
விழிகளின் வீச்சிலோ
சில
விபரீதங்களே நடந்துவிடுகன்றன !

-யாதுமறியான்.


-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (19-Mar-23, 3:16 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 92

மேலே