கோப்பையிலே தேநீர்
தேநீர் காதல் தேங்கியே கிடக்கும் தாகங்கள்
(படம் பார்த்து கவிதை எழுத்து )
கோப்பையிலே தேநீர்;
குடிக்க மனம் இன்றி எழுதும் பூங்கோதை;
கோப்பைக்கு எடுத்தது ஏக்கம்;
இவள் உதடுகளை வைத்து உறிஞ்ச மாட்டாலோ என்ற ஏக்கம் தான்;
மங்கையின் மனத்தில் நிறைந்து கிடக்குது தமிழ் மணம்;
கரங்கள் கவி எழுத துடிக்கிது;
கைவளையல்களும் இவள் கவிதையை படிக்க ஏங்கி தவிக்கிது
அவள் விரல்களின் ஸ்பரிசம், பேனாவும் உயிர் பெற்றது;
முத்து முத்தாய் கவிதையை வடித்தது அவளது இதயம்;
ஏக்கத்தை நிறப்பியது பேனா, பக்கங்கள் பாக்களால் நிறம்பின
பக்கத்து விரலில் இருந்த மோதிரமும், மோதிப் பார்க்கத் துடித்தது
கற்ப வலிதான் கையேட்டுக்கும்;
அ.