அத்தனையும் வெல்ல அழகினில் நீவந்தாய்

புத்தெழில் பூத்தது கீழ்வானில் செஞ்சிவப்பில்
புத்தகம் போன்று விரிந்தன பூமலர்கள்
சித்திரமாய் செந்தாமரை பூமட லைவிரிக்க
அத்தனையும் வெல்ல அழகினில் நீவந்தாய்


புத்தெழில் பூத்தது கீழ்வானில் செஞ்சிவப்பில்
புத்தகம் போன்று விரிந்தன பூமலர்கள்
சித்திரமாய் தாமரைப் பூமட லைவிரிக்க
அத்தனையும் வென்றிட நீ

புத்தெழில் பூத்தது கீழ்வானில்
புத்தகம் போல்விரியும் பூமலர்கள்
சித்திரமாய் தாமரைப் பூவிரிய
அத்தனையும் வென்றிட நீவந்தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Mar-23, 10:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே