கற்றுத் தருதோ காதல் பாடம் மெல்லிதழ்கள்

விற்புருவம் வளைந்த எழில்முகில் வானவில்லோ
நெற்றியின் அழகினில் பாதி நிலவோ
கற்றுத் தருதோகா தல்பாடம் மெல்லிதழ்கள்
கற்றபின் அதன்படி நடக்க வேன்டுமோநான்


விற்புருவம் ஓர்வளைந்த கார்முகில் வானவில்லோ
நெற்றியின் நல்லழகில் பாதி எழில்நிலவோ
கற்றுத் தருதோகா தல்பாடம் மெல்லிதழ்கள்
கற்றபின் என்செய்ய வோ ?

விற்புருவம் ஓர்வளைந்த கார்முகில் வானவில்லோ
நெற்றியின் நல்லழகில் பாதிநிலா - பொற்சிலையே
கற்றுத் தருதோகா தல்பாடம் மெல்லிதழ்கள்
கற்றபின் என்செய்ய வோ

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-23, 10:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே