அழகு

அழகு யாதென்று
அறிவார்ந்து அறியாத
மூடர்கள், புறப்பொழிவு
கூட்ட அழகு நிலையம்
நாடும் காலம் இஃது...

அக எண்ணம் அழகுற
அமைந்திடு மாயின் - புறத்
தோற்றம் பொழிவு மிகுது
தானாகவே மிளிரும்...

உள் மனதில் கள்ளம்,
கபட மகற்றி சகமானிடர்தம்
நலன் ஊறிட, அஃதே
சிறந்த அழகாக கருதப்படுமே

அல்லாது,

புறத்தால் காண்பவர் வியந்து
நோக்கும் வகையில் பொன்
வண்ணமும் வடிவமும் அமையப்
பெற்று புற மனதில்
கருமை படிந்திருப்பின் அதை
அழகென்று கொள்ள லாகாது...

சிந்தை தனை செதுக்கி
அழகாய் சீர்படுத்தி மனதினில்
உறமேற்றி அவ்வழி பிறழாமல்
வாழ்வினில் முன்னேறும் போது
நம் "புறமும்" தானே அழகாய்
மாறிடும்.

எழுதியவர் : கவிபாரதீ (25-Mar-23, 10:09 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : alagu
பார்வை : 119

மேலே