தாரகை போல்
சிறுதுளி மண்ணில்
விழுந்து..!!
வாங்கிய விதைகள்
முளை விட்டு
விலகுவது போல்..!!
என் ஆழ மனதில்
உறங்கிக் கொண்டிருந்த
அன்பை தட்டி
எழுப்பினால்..!!
இருண்ட வானில்
ஒளி வீசும்
தாரகை போல்
என்னில் வீசத்
துவங்கினால்!!
சிறுக சிறுக
என்னிலும் பிரகாசம்
கூடியது அவளால்..!!