உன் பார்வையில் காயம்பட்ட என் இதயம் 555

***உன் பார்வையில் காயம்பட்ட என் இதயம் 555 ***
உயிரானவளே...
நித்தம் நான் வந்து
செல்லும் பேருந்து பயணத்தில்...
முதல்முறை
உன்னை கண்டேன்...
உன் புருவ வில்லில்
பார்வை அம்புகளை தொடுத்தாய்...
சிறிதாக
காயம் பட்ட என் இதயம்...
விழிகளால்
காதல் மொழி எழுதியது...
உயிர் இருக்கும் போதே இதயம்
இடம்மாறியதை உணர்ந்தேன்...
காதல் கொண்ட என்
உள்ளம் வெளிக்காட்ட மறுத்தது...
பார்வை மொழியில்
உன்னிடம் காதலை சொன்னால்...
உன் இதழ்கள் மொழியோ
இல்லையென பொய் சொல்கிறது...
இடம்மாறிய இதயத்தால்
தினம் உறக்கத்தில்...
காதல்
கனவு கண்டேன்...
தினம்
கனாக்காணும் என்னோடு...
நீ கைகோர்க்க
போவது எப்போது...
என்மீது காதல் அம்பு
தொடுத்தவளே...
வாழ்க்கை
பாதையில் காத்திருக்கிறேன்...உ
ன் வருகைக்காக
தினம் தினம் நான்.....
***முதல்பூ.பெ.மணி.....***