குட்டைகவுன் போட்டவளுக்குக் குடைதந்து
எண்சீர் விருத்தம் பாமணிக்கு சமர்ப்பணம்
வெட்கமின்றி நித்தனித்தம் வேண்டிவேண்டி விற்பாய்
விற்றபாட்டை கடைவிரித்து மீண்டுமீண்டும் விற்றாய்
தட்டுமில்லை சொல்லுக்கு தமிழ்மொழியில் நீயும்
தடுமாறா நீலக்கண் தனைத்தேர்ந்து விற்றாய்
மட்டமான செம்பட்டை மயிர்தங்கம் என்றாய்
மாதரென்றால் அயல்நாட்டு மாதரென்றாய் நீயும்
குட்டைகவுன் போட்டவளை குடைதந்து பின்னே
குறுநகையும் புரியசொல்லி கூறினாய்பாட் டென்றே