அந்தி சாயும் நேரம்
அந்தி சாயும் நேரம்
ஆற்றங் கரை ஓரம்
அமர்ந்தி ருக்கும் நேரம்
அவன்வருவான் கரை ஓரம்...
இதழ்கள் பிரியாது இருகும்
வார்த்தைகள் வராது மருகும்
இதயம் காதலில் கலங்கும்
விழிகள் நான்கும் கவரும்...
காதலில் கரைந்த வலியை
இதயம் உணர்த்தும் விழியால்,
மனம்கனிந்த அவன் மனச்சுமையை
அகற்ற புன்னகைபான் விழியால்...
இதயம் இதமாய் சிலிர்க்கும்
விழியோரம் ஈரம் கரிக்கும்
விம்மித் தனியும் இதயம்
ஆனந்தம் புதிதாக ஊரும்...
மனமவன் தோள்சாய ஏங்கும்
இயல்பாய் வெட்கமதை தடுக்கும்,
விழிகள் நான்கும் சங்கமிக்கும்
கண்ணியமாய் ஒருகாதல் அரங்கேறும்!!!
அந்தி சாயும் நேரம்
ஆற்றங் கரை ஓரம்
ஆதுரமாய் பற்றிடும் இருகரம்
இனிதாய் இல்லறம் இருகும்.❤️