241 மனைவி இறந்தாலும் சூதாடுபவன் மனமகிழ்ந்து ஆடுவான் – சூது 5

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

கவறினை யாடுவோன் காந்தை வீயினுஞ்
சவமதில் வழிசெலு மென்று தானெழான்
அவள்புனை தாலிபந் தயத்துக் காமென
உவகைபூத் தாடுவா னுயர்வு றானரோ. 5

- சூது, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”சூதாடுபவன் தன் மனைவி இறந்தாலும் அப்பிணம் இவ்வழிதானே வரும் என்று எண்ணி சூதாடுவதிலிருந்து எழுந்து வீட்டிற்குச் செல்ல மாட்டான்.

அது மட்டுமில்லாமல், அவள் அணிந்திருக்கும் தாலி சூதாடும் ஈட்டுப் பொருளுக்கு ஆகும் என்று மனமகிழ்ந்து ஆடும் அவன் ஒருகாலும் மேன்மை அடைய மாட்டான்” என்றும் மனம் வருந்திக் கூறுகிறார் இப்பாடலாசிரியர்.

கவறு - சூது. காந்தை - மனைவி. வீதல் - இறத்தல். உவகை - மனமகிழ்வு. உயர்வு - மேன்மை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Mar-23, 4:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே