மறக்க முடியுமா கல்லூரி நாட்களை..//

மறக்க முடியுமா
கல்லூரியில் என் முதல்
காலடி வைத்த நாள்..//

சக நண்பர்களுடன்
பயணித்த முதல் நாள்
மறக்க முடியுமா..//

முதல் முதலாக அவளை
கவனித்த நாள்
மறக்க முடியுமா..//

மிக அழகாய் என்னுள்
பூத்து காதல்
மறக்க முடியுமா..//

மறைந்து மறைந்து பார்த்த
அவள் முகத்தை
மறக்க முடியுமா..//

10 பேர் வந்தாலும் எதிர்த்து
நிற்கும் தைரியம்
பத்து வினாடி அவளை
பார்க்க முடியாமல்
தவித்து போனேன்
அந்நாளை மறக்க முடியுமா..//

பல நண்பர்கள் கூடி
என்னை உற்சாகப்படுத்தியதும்
அவளிடம் ஒற்றை வார்த்தை
பேச நான் ஓயாமல் பயந்ததும்
மறக்க முடியுமா..//

கடைசி வருடம் வரை
அவள் என்னை கண்டு
கொள்ளாமல் போவதை மறக்க முடியுமா..//

இனி ஏழேழு ஜென்மத்துக்கும்
அந்நினைவு போதும்
மறக்க முடியாத நாள்..//

எழுதியவர் : (30-Mar-23, 9:12 am)
பார்வை : 32

மேலே