நீலக்கடல் சிரித்ததிலே நீந்திவந்து சேர்ந்தாயோ - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(தேமாங்கனி காய் 3)
1, 3 சீர்களில் மோனை)

நீலக்கடல் சிரித்ததிலே நீந்திவந்து
..சேர்ந்தாயோ?
காலாந்தகன் வந்தாலுங் காத்திடுவேன்
..காதலியே;
ஆலிங்கனம் செய்திடவே அருகினில்நீ
..வாராயோ?
சாலைப்புறம் வந்துநில்லு சத்தியமாய்ச்
..சொல்லிவிட்டேன்!

- வ.க.கன்னியப்பன்

பாடலில் பொருளும், சீரொழுங்கும் வேண்டும்;

தகுந்த மோனையும், எதுகையும் அமைந்தால் பாடல் மேலும் சிறக்கும்.

முதல்சீர் நான்கடிகளிலும் தேமாங்கனி!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Apr-23, 8:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே