பூந்தண் பொன்னி எந்நாளும் - ஆசிரிய விருத்தம்

இப்பாடல் என்ன வகை பாடலென்றும், வாய்பாடும், ஒவ்வொரு அடியிலும் அடியெதுகை எதுவென்றும் இதை வாசிப்பவர்கள் சொல்லலாம். குறிப்பாக திரு.கவின் சாரலன், திரு.சக்கரை வாசன், திரு.பழனிராசன் அவர்கள்.


பூந்தண் பொன்னி எந்நாளும்
பொய்யா தளிக்கும் புனல்நாட்டு
வாய்ந்த மண்ணித் தென்கரையில்
மன்ன முன்னாள் வரைகிழிய
ஏந்தும் அயில்வேல் நிலைகாட்டி
இமையோர் இகல்வெம் பகைகடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர்
மூதூர் செல்வச் சேய்ஞலூர்! 1

- 20 சண்டேசுர நாயனார் புராணம், பன்னிரண்டாம் திருமுறை, சேக்கிழார்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Apr-23, 12:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 63

மேலே