பெண்மை..//
உடைந்து ஓடும்
உதிரும் தேங்கக்கூடும்..//
மாதம் மூன்று
நாள் மறையும்..//
ஒவ்வொரு மாதமும்
வளர்ச்சி பெறும்..//
வலிகள் உச்சம்
நாள் நெருங்கும்..//
எலும்புகள்
வளைய கூடும்..//
தசைகள் அறுந்து வெளியேறும்..//
தெரியாத போது
பிறந்ததை விட..//
மறுபிறவி எடுக்கும்
பெண்மை..//
வலின் உச்சத்தை
கண்டு விடுவார்கள்..//
முடிந்தவரை
பெண்மையை போற்றுவோம்..//
அம்மா அக்கா
தங்கை நண்பி..//
மனைவி மகள்
என அனைவரும்..//
அனுபவிக்கும் சராசரி
வலி இதுவே..//