அப்பாவின் சட்டை

அப்பாவின் சட்டை

அப்பாவின் சட்டை
அநாதையாய்
கொக்கியில்
தொங்கி
கொண்டிருக்கிறது

வாரம் முதல் நாள்
பளிச்சென்று
துவைத்து
சலவை செய்து
கொக்கியில் பயபக்தியாய்
தொங்க விடப்பட்டிருந்த
சட்டைதான்

அதன் பையில்
அவ்வப்போது
அவரால் மடித்து
வைக்கப்பட்டிருக்கும்
காகித பணம்

மனைவியால்
வீட்டு செலவுக்கு
உருவப்பட்டு

அது போதாமல்
மகனும் மகளும்
தனி தனியாய்
கையாடல்
செய்ய பட்டு

மாதம் ஒரு
முறை வரும்
சம்பள நாள்
சட்டைக்கு
கிடைக்கும் மரியாதை..!

இன்று கண்டு
கொள்ளாமல் தொங்கி
கொண்டிருக்கிறது

அப்பா பனியனுடன்
தான் சுற்றி
கொண்டிருக்கிறார்.

ஓய்வு பெற்று
மாத ஓய்வு
தொகையும்
இல்லாமல்

அந்த சட்டையை
போலே..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (4-Apr-23, 10:14 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : appavin sattai
பார்வை : 34

மேலே