இரு இரவுகளின் விசித்திரம்
இன்று என் விடுமுறை கழிய , நாளை என் புறப்பாடு!
நாங்கள்
நேற்று கட்ந்த இரவும்; இன்று கடக்க மறுக்கும் இரவும் - எத்தனை விசித்திரமாக வித்தியாசப்பட்டிருகிறது!
அதே அறை; அதே மஞ்சம் ; அதே நாங்கள்
ஆயினும் - விசித்திரம் ; வித்தியாசம் !!
நேற்றைய இரவின் புணர்வில் தலை ஓங்கிய கலவியை ; பின் தள்ளியது இன்றைய இரவில் வெளிவந்து உச்சி முகர்ந்த எங்கள் - காதல்
அவள் முகம் பதித்த என் மார்பில் எங்கள் வியர்வை துளிகள் - எங்கள் தேகங்களுடன் நேற்றைய இரவு சூடேற ...
இன்றிரவு
என் அதே மார்பில் அவளது அதே முகம் கண்ணீர் துளிகளுடன் ஆசுவாச படுத்தியது - பிரிவினை எதிர்நோக்கிய எங்களை!!
மஞ்சத்தில்
தன் குருதியோடத்தின் முதல் நாள் என்றாள்..
வலி தனிய அவள் நாபியை பற்றிய என் கைவிரல்கள் இப்பொழுது அவள் கை விரல்களுக்குள்!!
வலிகளையும், வேதனைகளையும் கடந்து - நாங்கள் இருவரும் இறுக பற்றிக்கொண்டோம் - எங்கள் காதலை
நாங்கள் கடக்க விரும்பாத / முயலாத இந்த இரவை கடக்க !!!
- தினேஷ் ஜாக்குலின்