உன் சுவாசத்தோடு என் ஜீவன் கலந்துவிட 555

***உன் சுவாசத்தோடு என் ஜீவன் கலந்துவிட 555 ***


ப்ரியமானவளே...


மண்ணில் விழுந்த
பூவிதை கூட...

உயிர்பெற்று மீண்டும்
வசந்தம் வீசுது...

உன்னிடம் பறிகொடுத்த
என் இதயமும்...

உனக்காக
வாழ துடித்தது...

நான் உன்னோடும்
வாழ முடியவில்லை...

உனக்காகவும்
வாழ முடியவில்லை...

மீண்டும் என் வாழ்வில் வசந்தம்
வீச நீ தி
ரும்பி வருவாயா...

என்னை மறந்து
இரும்பாக இருந்துவிடுவாயா...

வானத்தில் தோன்
றி மறையும்
வானவில் போல...

இதயத்தில் முளைத்த நீ நிமிடத்தில்
மறைய நினைப்பது என்னடி...

உனக்காக
துடித்த என் இதயம்...

இன்று
உப்பு நீரில் நனைகிறது...

என் ஜீவன் காற்றில்
கரைய
காத்திருக்கிறேன்...

உன் சுவாசத்தோடு
என் ஜீவன் கலந்துவிட.....


***முதல் பூ .பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (11-Apr-23, 9:03 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 189

மேலே