தங்கநிற அழகு அஞ்சுகமா விசும்பா
நேரிசை வெண்பா
மஞ்சள் நிறவந்தி மன்றில் விசும்பதின்
வஞ்சி நிறஞ்சரியோ வையத்தில் -- மஞ்சளில்
விஞ்சல் அவளோ விசும்பதோ சற்றுநின்று
அஞ்சும் குறையை அகற்று
மன்றில் விசும்பதின் == வானத்தின் வாசலில்
அஞ்சும் குறை அகற்று == சந்தேகத்தை நீக்கு
நாலு வரியிலும் "" ஞ் """ எதுகை தனிச்சொல்லிலும் ""ஞ்"
அடிக்கு அடியில் ஒன்று மூன்றில் மோனை
முதல் வரி. ம. ம
இரண்டாம் வரி. வ. வை
மூன்றாம் வரி. வி வி
நான்காம் வரி. அ. அ
கவின் சாரலரின் வரிகளில் சரியான மோனைகள் இல்லை
என்பதால் எழுத நேர்ந்தது
கவின் சாரலரின் வெண்பாவின் வரிகள்
மஞ்சள் நிறப்பொன் னெழிலந்தி வானமே
வஞ்சியிவள் மேனியுடன் ஒப்பிட்டு --மஞ்சளில்
விஞ்சுவது நீயா இவளா எனப்பார்ப்பேன்
கொஞ்சம் அதுவரைநீ நில்
...