என் வலிகளை தாங்கிக்கொள்கிறேன் 555
![](https://eluthu.com/images/loading.gif)
***என் வலிகளை தாங்கிக்கொள்கிறேன் 555 ***
உயிரானவளே...
தினம்
உனக்காக காத்திருந்து...
உன் பார்வைக்காக ஏங்கி
தவித்த நாட்கள் எத்தனையோ...
உன்னிடம்
நான் காதல் சொல்லாமலே...
கடைக்கண்ணால் நீ
கொடுத்த காதல் கல்வெட்டு...
நான்
கல்லறை செல்லும்வரை...
என் இதயம்
உன் பெயர் சொல்லும்...
மரத்தை காயப்படுத்திதான்
மரம்கொத்தி தன் உணவை தேடும்...
என்னை காயப்படுத்துவதில்தான்
உனக்கு சந்தோசம் என்றால்...
மரம்போல்
வலிகளை தாங்கிக்கொள்ள...
நானும் சில நாட்களில்
பழகி கொள்கிறேன்...
உன்னுடன் சந்தோசமாக
பொழுதினை கழித்திட...
மறுநாளை
கடன் கேட்பவன் நான்...
நீ இல்லாத இந்த நாளை
வேண்டாமென வெறுக்கிறேன்...
என்மீது காதல்
அம்பு தொடுத்தவளே.....
***முதல்பூ.பெ.மணி.....***