நீ மறந்து சென்ற நம் காதல் பந்தம் 555

***நீ மறந்து சென்ற நம் காதல் பந்தம் 555 ***



என்னுயிரே...


இரம்பம் கொ
ண்டு அறுக்க பட்ட
மரத்தின் வேரில் உயிர் இருக்கும்...

நீர் துளிக்காக
காத்திருக்கும் துளிர்விட...

நீ வார்த்தைகள் கொண்டுதான்
என்னை வீழ்த்தினாய்...

நீ விட்டு சென்ற
நம் காதல் பந்தம்...

மீண்டும் தொடருமென
நான் காத்திருக்கிறேன்...

வெளியேறும்
சில நீர் துளிகள்...

நாம் சேர்ந்திருந்த
நாட்களை நினைவூட்டுதடி...

உன்னால் முடிகிறது
என்னை நினைக்காமல் இருக்க..
.

என் மனம் மட்டும்
ஏன் உன்னையே சுற்றி வருது...

அன்று செக்கில் பூட்டிய
எருது போல உன்னை சுற்றினேன்...

இன்று என் மனமும்
உன்னையே சுற்றுகிறது...

பிரிந்து செல்ல ஆயிரம்
கா
ரணம் இருக்கலாம்...

அமர்ந்து பேசினால்
அணைத்துக்கொள்ள...

இதைவிட வேறு என்ன
காரணம் இருக்க முடியும்...

உன் அழைப்புக்காக
காத்திருக்கிறேன் நான்.....


***மு
தல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (15-Apr-23, 8:41 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 210

மேலே