அம்மாவை மிஞ்சும் நண்பன் கிடைப்பானா

அம்மா என்ற அன்புச்சொல்லின்றி ஒரு வார்த்தையும் இல்லைதானேம்மா
அப்பா என்று ஆச்சரியம் கொள்ளாமல் ஒரு நாளும்தான் இல்லையேப்பா
அண்ணா என உரிமை கொண்டாட ஒருவன் இருந்திடில் அருமையண்ணா
அக்கா என்று மெய்யன்புடன் உறவாட எல்லோருக்கும் இருக்காளா அக்கா
தம்பி என்று ஆசையுடன் கடிந்துகொள்ள ஒருத்தன் வேணும்தானேடா தம்பி
தங்கை எனும் பாசதீபத்தை பிரகாசமாக ஒளிர்விக்க தேவைதானே தங்கை
தாத்தா தா தா என அன்புக்கரம்பற்றிக் கேட்க வேண்டுமெனில் ஒரு தாத்தா
பாட்டி எனில் சும்மாவா, தாயின் இருமடங்கு அன்புக்கு, ஆசையான பாட்டி
நண்பன் மெய்யன்பன் என்று கொண்டாட வேண்டும் எனக்கு ஒரு நண்பன்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (16-Apr-23, 3:43 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 111

மேலே