நட்பின் ஆழம்

நேரிசை வெண்பா


உயிர்காத் திடுவன்நம் தோழ னெனுஞ்சொல்
கயிறு திரித்தலின்று காணோம் -- அயிர்நட்பு
காண்ப தரிது கலியில் பலிநம்ப
காண்டலுண்மை தேர்ந்து கழறு

அயிர் நட்பு. = நுண்ணிய நட்பு


கூடிக்கெடு என்பது நாம் நம் மேற்கத்திய ரிடமிருருந்து கற்றுக் கொண்டாகி விட்டது.
நட்புக்கு இன்று மரியாதை கிடையாது என்பதே உண்மை

எழுதியவர் : பழனி ராஜன் (20-Apr-23, 11:35 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : natpin aazham
பார்வை : 508

மேலே