துணிக திரையவித்து ஆடார் கடல் - பழமொழி நானூறு 317

இன்னிசை வெண்பா

வரைபுரை வேழத்த வன்பகையென் றஞ்சா
உரையுடை மன்னருள் புக்காங் கவையுள்
நிரையுரைத்துப் போகாதொன் றாற்றத் துணிக
திரையவித்(து) ஆடார் கடல். 317

- பழமொழி நானூறு

பொருளுரை:

அலைகளை நீக்கிப் பின்னர்க் கடலில் ஆடுதலிலர் அதுபோல, புகழுடைய அரசர்கள் அவை நடுவே புகுந்து அவ்விடத்திருந்த அவை நடுவே கூறும் முறையால் தனது வீரத்தை மிகுத்துரைத்து,

மலைபோலும் யானைப் படையை உடையதாயிருந்தது வலிய பகை என்று அஞ்சி இது சமயம் வெல்ல முடியாததென்று ஒழியாது கூறியது ஒன்றனைச் செய்யத் துணிந்து நிற்க.

கருத்து:

வீரர் பகைவருடைய வலி குறைந்த பொழுது அவரை வெல்வோமென்று நினையாதொழிபவராக.

விளக்கம்:

முன்னரே தாம் அரசரிடம் தம் வீரத்தை மிகுத்துக் கூறியிருத்தலின் அதை மெய்ப்பிக்க வேண்டுதலானும்,

அங்ஙனம் போரிற் சென்று புரந்தார்கண் நீர்மல்கச் சாதல், வேண்டப்படுவது ஒன்றாகலானும், பகைவர் வலிய வந்து நிற்றல் உறுதியன்மையானும், துணிந்து செய்க என்பார், 'ஆற்றத் துணிக' என்றார்.

'திரையவித்து ஆடார் கடல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Apr-23, 3:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே