நீ கொடுத்த தனிமை கொடுமை 555
***நீ கொடுத்த தனிமை கொடுமை 555 ***
என்னுயிரே...
உன் மின்னல் பார்வையில்
என் பார்வையை இழந்து...
உன் மௌன சிரிப்பில்
என்னை இழந்து...
உன் இதய அறையில்
இடம்கேட்டு அன்று தவித்தேன்...
இன்றளவும் என்னை தேடுகிறேன்
என்னை காணவில்லையென்று...
நான்
எடுத்துக்கொண்ட தனிமை...
சுக நினைவுகளை
கொடுத்தது இதமாக...
உயிரற்ற ஜடமாக நான் நீ
கொடுத்த தலைமையில் இன்று...
உரிமைக்காக போராடிய எத்தனையோ
போராளிகள் இருக்கையில்...
நானோ உன்
நினைவுகளோடு போராடுகிறேன்...
நானும் போராளிதான்
காதல் போராட்டத்தில்...
காதல்
போராளி உன்னை மறக்க.....
***முதல்பூ.பெ.மணி.....***