கயிலை மலையான் தன்னைப் போற்று - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 5 / விளம்)
(1, 5 சீர்களில் மோனை)

உயிரைக் கண்டேன் உவகை கொண்டேன்
..உள்ளந் தன்னிலே;
செயிரை நீக்கிச் சிந்தை கொண்டேன்
..சேர்க்கும் விதந்தனில்!
பயிரை வளர்த்துப் பசியைப் போக்கு
..பாங்காய் வாழ்வினில்;
கயிலை மலையான் தன்னைப் போற்று
..கசிந்து நாளுமே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Apr-23, 3:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே