இயைபுடன் வாழ்ந்தால் எளிதினில் இறையடி - எழுசீர் ஆசிரிய விருத்தம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(1, 5 சீர்களில் மோனை)

கயமையாம் எண்ணங் கொண்டவர் வாழ்வில்
களிப்புடன் எதுவுமா காதே;
நியதியைப் போற்றி நேர்மையும் ஓங்க
நினைத்தது யாவையும் ஆக்கும்!
மயிலையின் நாதன் மனத்தினில் நினைக்க
மாட்சிமை பலவுமே தோன்றும்;
இயைபுடன் வாழ்வை இனிதென வாழ்ந்தால்
எளிதினில் இறையடி சேர்க்கும்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Apr-23, 8:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே