இயற்கைக்கு - பூ மாலை.

சாரி சாரியாய் படைகள்
தலையில்
வென்மகுடம் தரித்து,
சரக்கு ரயிலின்
அணிவகுப்பு போல்
தங்களின் பேடை தேடி
செல்லும் - ஊரும்
எறும்புகள்.
கிடைக்கும் புற்
பூண்டுகளையும்
அதில் வாழும்
தங்கள் இரைகளையும்
தேடிக் கொண்டு,
வாசம் கொள்ளும்
மாளிகைக்கு
பனி தாங்கும்
பணி செய்து
சந்ததியோடு
இரு திங்கள்
ஓய்வெடுக்க - வானில்
இயற்கையின்
பஞ்சு நெஞ்சை
தழுவி - பல
வண்ண விமானன்களாய்
பாடி பறக்கும்
பட்சிகள்.
மண மகனை
மன நிச்சயத்தின்
பொழுதில் மறைந்து
பார்க்கும்
மணப்பெண்ணின்
நாணத்தோடு -
பார்க்கவா? மறையவா?
என்று மேற்க்கில்
மறைய காத்திருக்கும்
கதிர்.
பால் ஒளியை
உருக்கி ஊற்றவ?
உலகை
மேருகேற்றவா? என
ஓவியன் வரையும்
பூஜ்யமாய் - முழு
வட்டமாய் மெல்ல
வெளி வந்து - கதிரின்
வன் கதிர் வேண்டுமா?
இல்லை என்
மென் கதிர் வேண்டுமா?
என வினவும்
பௌர்ணமி மதி.
சேரும்
அந்த அந்தி
மாலையில் -
பருவம் சுமக்கும்
பாவையின் சேலை
காற்றில் -
மடியிலிருக்கும்
காதலனின் - முகம்
வருடும் சுகம் என
நினைக்க தூண்டும் -
தென் மதுரையின்
மல்லி வாசத்தையும் - அதை
அள்ளி சூடும் - மன
கொல்லிகலாம்
மங்கையின் வாசத்தையும்
ஒருசேர
மொத்த குத்தகைக்கு
எடுத்து வந்து
பித்து பிடிக்க
வைக்கும் - மாலை
பூந்தென்றலும்.
பசும் போர்வையில்
இலவம் பஞ்சு
குவியல்களை ஊதி
சிறுவன்
களிக்கையில் - நகரும்
பஞ்சுகளாய் -
நீல வானை
தொட முயலும்
உயர கோபுர
மலைகளில் - அழகரின்
தேர் அசையும்
விசையில்,
மெல்ல மெல்ல
நகர்ந்து - செல்லும்
வெண் பனிப் புகையும் -
என்னில் இந்
நினைவுகளை இக்
கணம் எழுப்பி -
காட்சிகளை
ரவி வர்ம
வண்ணங்களாய் -
உருவாக்கிய
மார்கழி மாத
குளிர் மாலையே!
உனக்கு
சமர்ப்பிக்கிறேன்
இக்கவி பூ
மாலையையே!!!!!